முகப்பு
இந்தியா

உ.பி.யில் பலத்த மழை: சுவர் இடிந்து ஒருவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
UP: Man dies in wall collapse following heavy rains
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பபுவா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 60 வயது முதியவர் ஜிதேந்திர சிங் பலத்த காயமடைந்தார். 

பின்னர், பாபேரூவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →