குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று (புதன் கிழமை) மாநிலம் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மத்திய மற்று தெற்கு குஜராத், பஞ்ச்மஹால், வல்சாத், நவ்சாரி, சூரத், சோட்டா உதேபூர் மற்றும் நர்மதா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கனமழையால் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் மீட்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வரும் 21-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு குஜராத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.