முகப்பு
இந்தியா

சுற்றுச்சூழல் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
ராகுல் காந்தி
பகிர்:

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு  எதிர்கட்சித் தலைவர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 

'நாம் இயற்கையை பாதுகாத்தால்தான் இயற்கை நம்மைப் பாதுகாக்கும்'

சுற்றுச்சூழல் விதிகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-யை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, இது வரைவு அறிக்கைதான், பொதுமக்கள் கருத்துக்காகவே வெளியிடப்பட்டுள்ளது, இது இறுதி அறிக்கை அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும்,  அறிக்கை மீதான தங்களது கருத்துகளை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →