இந்தியா

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ரத்து

DIN

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்று தினமும் அதிகரித்துக் கொண்டிடே செல்கிறது. முதலில் சென்னையை மட்டும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கரோனா தொற்று தற்போது மற்ற மாவட்டங்களிலும் வெகுவாகப் பரவி வருகிறது. உள் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த நேரத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவது தொற்று இன்னும் அதிகமாகப் பரவ வழி வகுக்கும் என தமிழக அரசு கருதியது. அந்த முடிவை ரயில்வே துறையிடம் தெரிவித்தது. 

இதையடுத்து மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த ஏழு சிறப்பு ரயில்களை ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. தற்போது இந்த சிறப்பு ரயில்கள் மீதான தடையை ஆகஸ்ட் 31 வரை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

இதேபோல் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி - செங்கல்பட்டு, அரக்கோணம் - கோவை, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு 100 சதவீத கட்டண தொகையும் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT