முகப்பு
இந்தியா

இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்

பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய சுதந்திர தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்
பகிர்:

இந்திய நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாட்டின் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய சுதந்திர தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. 

கூகுள் வெளியிட்டுள்ள சித்திரத்தில் பல்வேறு இந்திய இசைக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தச் சித்திரத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியச் சூழலில் பயன்படுத்தப்பட்டு வரும் டுட்டாரி, ஷெஹ்னாய், வீணை, சாரங்கி மற்றும் பன்சூரி உள்ளிட்ட பல பிரபலமான  நாட்டுப்புற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தச் சித்திரத்தை மும்பையைச் சேர்ந்தக் கலைஞர் சச்சின் கானேகர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின்,  “சுதந்திர தினம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம், ஒரு கலைஞனாக என்னைப் பொறுத்தவரை, இது உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது. எனது சுதந்திரத்திற்காக கனவு கண்ட மற்றும் அதற்காக போராடிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →