முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது: பலி 49,036 ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 65,002 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

புது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 65,002 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 193 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 49,036 -ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 65,002 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 996 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 49,036-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 6,68,220 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,08,937 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,51,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,01,442 தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு 19,427 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு 53,716 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,67,015 ஆகவும் உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திரத்தில் 89,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,80,703 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்துள்ளனர். இருப்பினும், தொற்றுக்கு 2,475 பேர் பலியாகியுள்ளனர். 

தலைநகர் தில்லியில், 11,366 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,35,108 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,178 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 2,85,63,095 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 8,68,679 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  25,26,193
பலி:  49,036
குணமடைந்தோர்: 18,08,937
சிகிச்சை பெற்று வருவோா்: 6,68,220

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.