கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலி
கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பாலி வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த நிலையில் 12 வயதுடைய புலி கிடந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் புலி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
2016-ல் வெளியிடப்பட்ட உலக புலி புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2,226, ரஷ்யாவில் 433, இந்தோனேசியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, வங்காளதேசத்தில் 106, பூட்டானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, மற்றும் லாவோஸில் 2 புலிகள் இருந்தன.