மேற்கு வங்கத்தில் முதல் முயற்சி: திருநங்கைகளுக்கு பேருந்தில் தனி இருக்கை
மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து சேவை நிறவனங்கள், திருநங்கைகளுக்கு என தனி இருக்கைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் பேருந்து சேவை நிறவனங்கள், திருநங்கைகளுக்கு என தனி இருக்கைகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
பேருந்தில் மாற்றுத் திறநாளி மற்றும் முதியவர்களுக்கு, ஆண்கள், பெண்கள் என தனித்தனி இருக்கைகள் இருக்கும் நிலையில், தற்போது திருநங்கைகளுக்கும் இரண்டு தனி இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு என ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு இருக்கைகள் இனி உருவாக்கப்படும். மாநிலத்தில் சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருந்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு வெறும் இரண்டு இருக்கைகள் என்று இதற்கு அர்த்தமாகாது, பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், அவர்களையும் சமமாக கருத வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.