முகப்பு
இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5  நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களான ஹரியாணா, தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் வடக்கு ராஜஸ்தானில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரம், கோவா ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →