அமைச்சர் நிதின் கட்கரி 
இந்தியா

சிறு, குறு நிறுவனங்களின் விநியோகஸ்தர்களும் பலன் அடைய வேண்டும்: நிதின் கட்கரி

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பலன்கள் அதன் விநியோகஸ்தர்களையும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

DIN

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பலன்கள் அதன் விநியோகஸ்தர்களையும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்கள் அரசு சலுகைகளை அனுபவிக்கும் வகையில் பதிவு செய்துகொள்ள முன்வர வேண்டும். 

பதிவு செய்துகொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கட்டண மானியங்கள், வரி மற்றும் மூலதன மானியங்கள் வழங்கப்படும்.

பதிவு செய்வதன் மூலம் அரசு டெண்டர்களும், குறைந்த வட்டியிலான கடன்களும் கிடைக்கும்.

சிறு, குறு நிறுவனங்களுக்காக நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் விடுவிக்குமாறு முக்கிய தொழில்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப மையத்தையும், பயிற்சி மையத்தையும், ஆய்வு மையத்தையும் வருமான வரிமூலம் ஊக்குவிக்க வேண்டும் என நிதித்துறையிடம் அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

SCROLL FOR NEXT