முகப்பு
இந்தியா

மத்திய பிரதேச இளைஞர்களுக்கே மாநில அரசு வேலை: முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு

மத்திய பிரதேச மாணவர்களுக்கு அரசு வேலைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
மத்திய பிரதேச இளைஞர்களுக்கே மாநில அரசு வேலை: முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
பகிர்:

மத்திய பிரதேச மாணவர்களுக்கு அரசு வேலைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரையில் "மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மாநிலத்தின் முன்னேற்றத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள திறமைகளை ஈடுபடுத்துவதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளகான், “இன்று மத்தியப்பிரதேச அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.