முகப்பு
இந்தியா

நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் ஆயிஸோல் மாவட்டம்

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 15.7 லட்சமாக உயரும்
பகிர்:

புது தில்லி: நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஆயிஸோல் மாவட்டம் விளங்குகிறது.

இங்கு ஆண்களில் ஒரு லட்சம் பேரில் 296.4 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்து உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் இது 39.5 விகிதமாக உள்ளது. பெண்களில் அதிக புற்றுநோய் பாதிப்பைக் கொண்டிருக்கும் மாவட்டமாக அருணாசலத்தின் பாபும் பாரே உள்ளது. இங்கு ஒரு லட்சம் பெண்களில் 219.8 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்ததாக உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் புற்றுநோய் பாதித்த பெண்களின் விகிதம் 49.4 ஆக உள்ளது. 

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என்று கணித்திருந்ததை விட உயர்ந்து தற்போது 12% உயரும் அபாயம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்துக்குக் கிடைத்த அடிப்படைத் தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில் புகையிலை பழக்கம் கொண்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 3.7 லட்சமாக (27.1%) ஆக உள்ளது. பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோயாளிகளின எண்ணிக்கை 2.0 லட்சமாக (14.8%) ஆகவும், குடல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2.7 லட்சமாக (19.7%) ஆகவும் உள்ளது.

நாட்டில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் வட இந்திய மாநிலங்களில் அதிகம் இருப்பதும், குறிப்பாக ஆண்களுக்கு இந்த பழக்கம் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தப் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு, குடல் புற்றுநோய் ஏற்படுவது வழக்கமானதாக உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →