முகப்பு
இந்தியா

கர்நாடகம்: கிருஷ்ணா நதி வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
கர்நாடகம்: கிருஷ்ணா நதி வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெலகாவி மற்றும் பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரு மாநிலங்களிலும் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் விவசாய நிலங்களுக்கு திறந்துவிடப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மத்திய மற்றும் தெற்கு மகாராஷ்டிரத்தில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் நீர் பெருக்கெடுத்துள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →