படங்களுடன் வண்ணமயமாக மேம்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ்
முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்லுவோருக்கு பேருதவி செய்வது தேடல்பொறியான கூகுள் வரைபடம். அது தற்போது வண்ணமயமாக, அதிக தகவல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்லுவோருக்கு பேருதவி செய்வது தேடல்பொறியான கூகுள் வரைபடம் (மேப்ஸ்). அது தற்போது வண்ணமயமாக, அதிக தகவல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் வரைபடம் உலகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு, ஓரிடத்தின் இயற்கை வண்ணத்தையும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளையும் தேடுவோருக்குக் காட்டினால் அது எவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியது அவசியமில்லை.
புதிய பகுதி அல்லது ஒரு நகரைப் பற்றி நீங்கள் அறிய வேண்டும் என்றால் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தும் போது, அது மேலும் வண்ணமயமாக, அந்தப் பகுதி எவ்வாறு இருக்கும் என்பதை காட்டுவதாக இருக்கும். இது இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கை வளங்கள், கட்டடமைப்புகள் அனைத்தையும் கூகுள் வரைபடத்தில் விரிவுபடுத்தி பார்க்கும் வசதி மூலம் பெறலாம் என்று கூகுள் வரைபடத்தின் திட்ட மேலாளர் சுஜோய் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுமட்டுமல்லாமல், ஓரிடத்தின் துல்லியமான வடிவமைப்பு மற்றும் சாலையின் அளவையும் துல்லியமாக அளிக்கும் வகையில் கூகுள் வரைபடத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வரும் மாதங்களில் லண்டன், நியூ யார்க், சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரங்களின் சாலைகள் அதிகத் தகவல்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.