முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரின் மனைவி கரோனாவுக்கு பலி

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் சோட்டே லால் வர்மாவின் மனைவி கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி ஆக்ராவில் உயிரிந்தார். 

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 12:50 PM
Ex-UP minister's wife succumbs to corona
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் சோட்டே லால் வர்மாவின் மனைவி கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி ஆக்ராவில் உயிரிந்தார். 

இதுவரை, யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சேதன் செளகான் மற்றும் கமல் ராணி வருண் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கரோனாவுக்கு பலியாகினர். 

ஆக்ராவைச் சேர்ந்த அமைச்சர் சௌத்ரி உதய்பன் சிங்கிற்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அதுல் கார்க் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இந்நிலையில், ஆக்ராவின் முன்னாள் அமைச்சர் வர்மாவின் மனைவி கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதைத்தவிர, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ் சேகர், சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர சிங் யாதவ், பாஜக மகிளா மோர்ச்சா, மாநிலத் தலைவர் தர்ஷனா சிங் ஆகியோரும் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.