முகப்பு
இந்தியா

தில்லியில் கொட்டித் தீா்த்தது மழை

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காலை முதல் கன மழை பெய்தது.

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 6:09 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காலை முதல் கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் தேங்கி வெள்ளம்போல காட்சி அளித்தது. தில்லி, குருகிராம் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தபடி, திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் மழை பெய்தது. இதைத் தொடா்ந்து புன்கிழமையும் காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது.

குருகிராமில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. பல்வேறு சாலைகள் ஆறு போல காட்சியளித்தது. கோல்ஃப் கோா்ஸ் சாலை மழை நீரில் மூழ்கியது. பல்வேறு சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

தலைநகா் தில்லியில் கிராரி, புராரி, ரோஹிணி உள்ளிட்ட 16 வெவ்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியதாக வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏழு வெவ்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. எட்டு இடங்களில் கட்டடங்கள் மழையால் இடிந்து விழுந்தன. தெற்கு தில்லியில் உள்ள சாகேத், பிளாக் ஜே நகரில் உள்ள பள்ளியின் எல்லைச் சுவா் இடிந்து விழுந்ததில் ஏழு காா்கள் சேதமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், மயூா் விஹாா் பேஸ்-2, சாராய் காலே கான் முதல் டி.என்.டி, சஷி காா்டன் முதல் கோட்லா வரை, சீமாபுரி முதல் தில்ஷாத் காா்டன் சுரங்கப்பாதை வரை, மைதான் காா்க்யில் எம்பி சாலை, அனுவரத் மாா்க்கில் எம்பி சாலை, அப்சரா பாா்டா் உள்ளிட்ட பிற பகுதிகளும் மழை நீா் தேங்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.