மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி 
இந்தியா

ஆந்திரத்தில் முதல்முறையாக 2 பிளாஸ்மா வங்கிகள் திறப்பு

ஆந்திரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக 2 பிளாஸ்மா வங்கிகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தார்.

DIN

ஹைதராபாத்: ஆந்திரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக இரண்டு பிளாஸ்மா வங்கிகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கிகளும் திறக்கப்பட்டு, பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஆந்திரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக 2 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி திறந்துவைத்தார்.

இதன் பிறகு அவர் பேசியதாவது, ஆந்திரத்தில் பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிளாஸ்மா வங்கி திறப்பிற்கு உதவிய ரோட்டரி சங்கத்திற்கு மக்கள் சார்பில் நன்றி என்று கூறினார்.

மேலும், நமது  கவனமின்மை நமக்கு தண்டனையை உருவாக்கும், எச்சரிக்கை நமக்கு பாதுகாப்பை வழங்கும்.  நேற்று (சனிக்கிழமை) மட்டும் 10,25,000 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள மக்கள் தயங்கக் கூடாது. கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசிவருகிறார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT