முகப்பு
இந்தியா

காங்கிரஸிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்: ஒவைசி

​அடிமையாக இருப்பது பற்றி காங்கிரஸிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
​அடிமையாக இருப்பது பற்றி காங்கிரஸிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
பகிர்:


அடிமையாக இருப்பது பற்றி காங்கிரஸிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஒவைசி தெரிவித்ததாவது:

"குலாம் நபி ஆசாத் எங்களை பாஜகவின் 'பி' டீம் என்று அழைப்பார். தற்போது அவரது கட்சியின் முன்னாள் தலைவரே, கடிதத்தில் கையெழுத்திட்டதால் பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள், காங்கிரஸ் தலைமையின் கீழ் எத்தனை நாள்களுக்கு அடிமையாக இருப்பது என்று சிந்திக்க வேண்டும்" என்றார் ஒவைசி.

முன்னதாக, கட்சித் தலைமை விவகாரம் பற்றி சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதிய விவகாரத்தில் பாஜகவின் சதி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகக் கூறப்பட்டது. இதைக் குறிப்பிட்டே ஒவைசி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

எனினும், ராகுல் காந்தி அவ்வாறு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குலாம் நபி ஆசாத்தும் ராகுல் கூறியதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி குலாம் நபி ஆசாத் தெரிவித்ததாவது:

"காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் சரி, கூட்டத்துக்கு வெளியேவும் சரி, இந்தக் கடிதம் பாஜகவின் சதியால் எழுதப்பட்டது என்று ராகுல் காந்தி ஒருபோதும் கூறவில்லை".

முழு கட்டுரையைப் படிக்க →