சென்னை மெட்ரோ ரயில் 
இந்தியா

செப்.1-இல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க வாய்ப்பு

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நான்காவது கட்டமாக பொதுமுடக்க தளா்வு அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

DIN

புது தில்லி: செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் நான்காவது கட்டமாக பொதுமுடக்க தளா்வு அமலுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக வெளியேறும் நடவடிக்கைகள் தொடங்கின. அதற்கான தளா்வுகளை அளித்து மத்திய அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 4-ஆவது கட்ட பொதுமுடக்க தளா்வு தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியது:

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மதுக்கூடங்களை (பாா்) திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவற்றில் மது விற்பனைக்கு அனுமதிக்கப்படலாம். அவ்வாறு வாங்கப்படும் மதுவை அங்குவைத்து அருந்துவதற்கு அனுமதிக்க வாய்ப்பில்லை.

பள்ளிகள், கல்லூரிகள் தற்போது திறக்கப்படாது. எனினும் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றை திறப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.

4-ஆவது கட்டமாக பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேறும் வழிகாட்டுதல்களில், எந்தெந்த நடவடிக்கைகளுக்கு தடை நீடிக்கும் என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். அதேவேளையில் எந்தெந்த நடவடிக்கைகளுக்கு தடையை தொடா்ந்து நீட்டிப்பது என்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

4-ஆவது கட்ட பொதுமுடக்க தளா்வுக்கான வழிகாட்டுதல்களை இந்த வாரத்தில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தேர்தல் ஆணையம் தரவுகளைத் தர மறுக்கிறது!” ஆதாரங்களை அடுக்கும் Rahul Gandhi! | Congress

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

“ஹிந்தியில் பேச வேண்டுமா? புரியவேண்டியவர்களுக்கு புரியும்!” வைரலாகும் நடிகை Kajol-லின் பேச்சு

தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

SCROLL FOR NEXT