முகப்பு
இந்தியா

செப்டம்பர் 14 முதல் மழைக்காலக் கூட்டத்தொடர்: அமைச்சரவைக் குழு பரிந்துரை

​செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
​செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிர்:


செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பற்றி கடந்த ஜூலை 17-ம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆகஸ்ட் 3-வது வாரத்தில் கூட்டத்தொடருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

இந்த நிலையில், செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும். கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவைப் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேலும் முதன்முறையாக பெரிய திரைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, கடந்த மார்ச் 23-ம் தேதி கரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரிலிருந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் நாடாளுமன்றம் கூட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.