ராம்விலாஸ் பாஸ்வான் 
இந்தியா

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் ஞாயிற்றுகிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் ஞாயிற்றுகிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்துவித பரிசோதனைளும் முடிந்த பிறகு ராம்விலாஸ் பாஸ்வான் இன்று வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. 

லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு விலகினார். பாஸ்வானுக்கு பின்னர் அவருடைய மகன் சிராக் குமார் பாஸ்வான் அப்பொறுப்பை ஏற்றார். ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஏற்கெனவே சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளது.

இதற்காக அவர் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT