முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் பலி, 8 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
6 killed, 8 injured in Roadways bus collision
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்துள்ளனர். 

ககோரி காவல் நிலையத்துக்குட்பட்ட லக்னௌ-ஹார்டோய் சாலையில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஏசிபி எஸ்.எம் காசிம் அப்தி கூறியுள்ளார். 

மேலும், காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு பேருந்து மற்றொரு பேருந்துடன் முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.