முதல்முறையாக ஜோடி சேரும் சல்மான் கான் - நயன்தாரா!
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் சல்மான்கானுடன் சேர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் சல்மான்கானுடன் சேர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. தற்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்திலும் அசத்தி வருகிறார். தயாரிப்பிலும் அசத்தும் நயன்தாரா, ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஜனவரியில் சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் கரு’ படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் தயாராகி வரும் டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள நிலையில், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், சல்மான் கான் நடிப்பில், 'வாரிசு' படப் புகழ் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் தங்கள் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாராவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. அஜித்தின் துணிவு படத்துக்குப் போட்டியாக வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து அவர் புதிய படம் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இரண்டு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் சல்மான்கான் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து முதல்முறையாக நடிக்கவிருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கான் படம் தவிர்த்து, அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் 'சங்கராந்திகி வாஸ்து நாம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் தில் ராஜு தயாரிக்கிறார். வெல்கம் மற்றும் நோ என்ட்ரி போன்ற நகைச்சுவைப் படங்களுக்குப் பெயர் பெற்ற அனீஸ் பாஸ்மி, இந்தப் படத்தின் ரீமேக்கை இயக்குகிறார்.
A major update has arrived for the much-awaited film starring Salman Khan and directed by Vamshi Paidipally. The makers recently confirmed that Nayanthara has joined the project as the female lead. The announcement quickly created excitement among fans across the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.