இந்தியா

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜகவில் இணைந்தார்

கர்நாடகாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.

DIN


புது தில்லி: கர்நாடகாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.

தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில்,  அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் முன்னிலையில்  இணைந்தார்.

இந்த நிகழ்வின் போது பாஜகவின் தமிழகத் தலைவர் எல்.முருகன்,  தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் உடனிருந்தனர். 

அதன் பிறகு, பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின்  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை அண்ணாமலை  நேரில் சந்தித்தார். 

தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை,  கர்நாடகா மாநில கேடர் அதிகாரியாவார். அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில்  காவல்துறை அதிகாரியாக 9 ஆண்டுகள் பணியாற்றினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT