முகப்பு
இந்தியா

தாணேவில் கரோனா பாதிப்பு 1,17,739 ஆக உயர்வு 

தாணேவில் கரோனா பாதிப்பு 1,17,739 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
Maha: COVID-19 tally in Thane crosses 1.17 lakh
பகிர்:

தாணேவில் கரோனா பாதிப்பு 1,17,739 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,326 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,17,7396 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 38 பேர் பலியாகியுள்ள நிலையில் 3,386 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

மாவட்டத்தில் கல்யாண் நகரத்தில் இதுவரை 27,412 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இது அந்த மாவட்டத்தில் 23 சதவீதமாக உள்ளது. தாணே நகரம் மற்றும் நவி மும்பை டவுன்ஷிப் ஆகிய மாவட்டத்தில் பாதிப்பு சதவீதம் 21 ஆகம். 

தற்போது வரை, மாவட்டத்தில் 12,249 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 1,02,104 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மீட்பு விகிதம் 86 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.