நீட், ஜேஇஇ வேண்டாம்: மத்திய அரசுக்கு திறந்த கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ் 
இந்தியா

நீட், ஜேஇஇ வேண்டாம்: மத்திய அரசுக்கு திறந்த கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ்

கரோனா பரவி வரும் நிலையில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திறந்த கடிதம் எழுதியுள்ளா

DIN


லக்னௌ: கரோனா பரவி வரும் நிலையில், நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திறந்த கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், அடிப்படை இல்லாமல், வேலை நிமித்தமாக வெளியே பொதுமக்கள் வரும் போது தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் வர முடியாதா என்று பாஜக  அடிப்படை இல்லாமல், விளையாட்டுத்தனமாக கேள்வி எழுப்புகிறது. ஆனால், பொதுமக்கள் வேறு வழியே இல்லாமல்தான் பணிக்காக வெளியே வருகிறார்கள். ஆனால், தங்கள் பாதுகாப்புக்காக வீட்டுக்குள்ளேயே இருப்போரையும் தேர்வு மூலமாக மத்திய அரசு வெளியே வர கட்டாயப்படுத்துகிறது.

ஒருவேளை மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவினால், அதற்கான பொறுப்பை யார் ஏற்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 - 6-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இந்த தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலையையே எதிர்க்கட்சிகளும் எடுத்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT