ராஜஸ்தானில் புதிதாக 633 பேருக்குத் தொற்று: 6 பேர் பலி
ராஜஸ்தானில் புதிதாக 633 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 75,303 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் புதிதாக 633 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 75,303 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளதையடுத்து, உயிரிப்பு 998 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 14,646 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தியாவின் கரோனா வைரஸ் பாதிப்பு 33 லட்சத்தைத் தாண்டியது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
தொற்று காரணமாக ஒரேநாளில் 1,023 பேர் பலியானதை தொடர்ந்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 60,472ஐ எட்டியுள்ளது.