இந்தியா

10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்ற உணவகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

DIN


மும்பை: மத்திய மும்பையில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நுகர்வோருக்கும் இழப்பீடு வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில், அந்த உணவகம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்துள்ளது. இவ்வாறு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலை வைத்து பொருள்களை விற்று ஏராளமான லாபம் ஈட்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் தரப்பில் கூறுகையில், தான் உணவகத்துக்குள் நுழைய கூட இல்லை, வாயிலில் இருக்கும் பணம் செலுத்தும் இடத்திலேயே பணத்தை செலுத்தி ஐஸ்க்ரீமை வாங்கியதாவும், அதன் உண்மையான விலை ரூ.165 ஆக இருந்த நிலையில், ரூ.175 வசூலிக்கப்பட்டு, ரசீதும் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 2015-ஆம் ஆண்டு முறையிடப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT