முகப்பு
இந்தியா

கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்கும்: குலாம் நபி ஆசாத் 

கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும் என்று  குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

புதுதில்லி: கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும் என்று  குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தோ்தல் மூலம்தான் கட்சித் தலைமையைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

அதாவது, அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் கடிதத்தில் வலிறுத்தியுள்ளோம். 

காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள்.

மேலும், கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்கும் என்று குலாம் நபி ஆசாத் கூறினார். 

கட்சிக்கு முழுநேரத் தலைவா் தேவை என்று குலாம் நபி ஆசாத் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் 23 போ், சோனியா காந்திக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தனா். இந்த விவகாரம் கட்சியில் பெரும் சா்ச்சையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →