ஷின்ஸோ அபே விரைவில் குணமடைய பிரார்த்தனை: பிரதமர் மோடி
உடல்நலக் குறைவால் ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ஷின்ஸோ அபே விரைவில் நலமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாஷின்ஸோ அபே விரைவில் குணமடைய பிரார்த்தனை: பிரதமர் மோடி
உடல்நலக் குறைவால் ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ஷின்ஸோ அபே விரைவில் நலமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ஷின்ஸோ அபே விரைவில் நலமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளம் வயது முதலே அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, வயது மூப்பின் காரணமாக மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தமது பதவியை இன்று (வெள்ளிக் கிழமை) ராஜிநாமா செய்தார்.
இதனிடையே ஷின்ஸோ அபே விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனது நண்பரான ஷின்ஸோ அபே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. தங்களது தலைமையிலான அரசு மற்றும் தங்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு காரணமாக இந்தியா - சீனா இடையேயான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் வலுவடைந்துள்ளது. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.