முகப்பு
இந்தியா

அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பகிர்:

புது தில்லி: சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர் அய்யன்காளி. வெள்ளியன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சமூக சீர்திருத்தவாதி மகாத்மா அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கான அவரது உழைப்பு என்றுமே உத்வேகம் தரக் கூடியது. அவரது பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments