இந்தியா

குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: உ.பி. காங். தலைவர்

DIN

குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: உ.பி. காங். தலைவர்
காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் கோரி கடிதம் எழுதிய 23 பேரில் ஒருவரான குலாம் நபி ஆசாதை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் நசீப் பதான். 

இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என, உள்ளிட்ட 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அந்தக் கடிதம் தன்னைக் காயப்படுத்தியதாகவும், ஆனால், இப்போது பிரச்னை முடிந்துவிட்டது என்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறிவிட்டார். அதன் பிறகும் குலாம் நபி ஆசாத் ஊடகங்களுடன் பேசி, அதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். எனவே, கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதால்,
அவரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக பதான் ஒரு விடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

ஆசாதுக்கு எதிராக  நசீப் பதான் அறிக்கை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. 2017 உத்தர பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த குலாம் நபி ஆசாத் ராஜிநாமா செய்ய வேண்டும் என,  நசீப் பதான் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT