இந்தியா

ஓணம் பண்டிகை: கேரளத்தில் பூக்கள் விற்பனை கடும் சரிவு

DIN

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக பூக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளத்திற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனினும் கேரளத்தில் பூக்கள் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ஒரு நாளுக்கு ரூ.12,000 வரை விற்பனையான பூக்கள் தற்போது ரூ.300 வரை மட்டுமே விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெருமளவு பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவை விற்பனையாவாததால், பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT