இந்தியா

ஒடிசாவில் ஒருலட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

ஒடிசாவில் புதிதாக 3,014 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன மூலம் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 3,014 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,934-ஆக அதிகரித்துள்ளது. இதில் 29,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,868 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 1,146 பேருக்கு சமூக பரவல் மூலமும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதிதாக 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 482-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து  70,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மட்டும் 60,646 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 17,31,556 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT