இந்தியா

சர்வதேச பயணிகள் விமான சேவை செப். 30 வரை ரத்து

DIN

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விமான சேவை ரத்து என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். சரக்கு சேவை விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்கி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT