முகப்பு
இந்தியா

வீட்டின் மேல் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி: வீட்டு உரிமையாளர் கைது

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் மேல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வீடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் மேல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வீடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்ட ஷிப்ரா கிராமத்தில் உள்ள பாரூக்கான் தனது வீட்டின் மேல் பாகிஸ்தான் நாட்டின் கொடியை பறக்கவிட்டதாக வெளியான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(ஏ) சட்டத்தின் கீழ் பாரூக்கான் கைது செய்யப்பட்டார். மேலும் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

தனது 12 வயது மகன் விளையாட்டாய் கொடியேற்றிவிட்டார் என கைது செய்யப்பட்ட பாரூக்கான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.