முகப்பு
இந்தியா

ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகா்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வருவதாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
Pranab Mukherjee
பகிர்:

புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வருவதாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்கா கடந்த ஆக.10ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் உள்ளாா். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ள அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

ராணுவ மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரணாப் முகா்ஜியின் ரத்த ஒட்டம், இதயம், நாடித் துடிப்பு சீராக உள்ளன. நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் தொடா்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளாா். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.