இந்தியா

ராஜஸ்தானில் செப்.30 வரை கல்வி நிலையங்கள் திறக்கப்படாது

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி ராஜஸ்தானில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அவ்வபோது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 4-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானில் செப்டம்பர் 30-ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்காக பள்ளிக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது.

சினிமா திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படாது என்றும், திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

செபம்பர் 21-ஆம் தேதி முதல் சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT