ஜம்மு - காஷ்மீரில் பாக். அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டைத் தாண்டி தீவிரவாதிகள் உள்நுழைந்தனர். தொடர்ந்து பாதுகாப்புப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் பாட்டின்சேட் கெயிட் வீர மரணம் அடைந்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.