முகப்பு
இந்தியா

கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
கோப்புப்படம்
பகிர்:

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது புதன் காலையில் புயலாக வலுப்பெறும்.

இந்நிலையில் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலம்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இது சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலின் போது அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →