கரோனா தடுப்பூசி: தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்
கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் ஆய்வுகளை பல நாடுகள் முன்னெடுத்துள்ளன.
இந்தியாவில் ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கரோனா தடுப்பூசி குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.