முகப்பு
இந்தியா

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 36,011 பேருக்கு தொற்று; 482 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 ணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 96,44,222 லட்சமாக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 ணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 96,44,222 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 96,44,222-ஆக அதிகரித்தது.

இதேபோல், கரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,970 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 91,00,792-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,03,248 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு மேலும் 482  போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,40,182-ஆக அதிகரித்தது. 

‘டிசம்பா் 5-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 14,69,86,575 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சனிக்கிழமை மட்டும் 11,01,063 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.