முகப்பு
இந்தியா

கரோனாவை கையாள்வதில் டிரம்ப் தோல்வி, மோடி வெற்றி: ஜெ.பி.நட்டா

இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டு பணிகளை நரேந்திர மோடி திறம்பட செய்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
பகிர்:


இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டு பணிகளை நரேந்திர மோடி திறம்பட செய்து வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கரோனாவை கட்டுப்படுத்திவதில் சரியாக செயல்படாததால் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறினார்.

உத்தரகண்டில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், அமெரிக்காவில் கரோனாவை கையாள்வதில் டிரம்ப் நிர்வகம் தோல்வியடைந்துள்ளது. ஆனால் ஊரடங்கின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்தார். 

அமெரிக்காவில் கரோனாவை கட்டுப்படுத்திவதிலும், பொருளாதாரத்திலும் இன்னும் நிலையில்லாத் தன்மையே நீடித்து வருகிறது. ஆனால் இந்தியாவில், நாம் அத்தகைய நிலையற்ற தன்மையிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →