முகப்பு
இந்தியா

11 நாள்களுக்குப் பின்.. மிக்29 விமானி உடல் மீட்பு

அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29கே பயிற்சி விமானத்தின் விமானி நிஷாந்த் சிங்கின் உடல் சுமார் 11 நாள்கள் தேடலுக்குப் பின் இன்று மீட்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
11 நாள்களுக்குப் பின்.. மிக்29 விமானி உடல் மீட்பு
பகிர்:

அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிக் 29கே பயிற்சி விமானத்தின் விமானி நிஷாந்த் சிங்கின் உடல் சுமார் 11 நாள்கள் தேடலுக்குப் பின் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டாா். மற்றொருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் இருந்து, நவம்பர் 26-ம் தேதி அந்த பயிற்சி விமானம் இரு விமானிகளுடன் புறப்பட்டுச் சென்றது. மாலை 5 மணியளவில் அந்த விமானம், அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்து ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டாா். மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கப்பல்களும், ரோந்து விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்த விபத்து குறித்து உயா்நிலை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் 40 மிக்29கே ரக போா் விமானங்கள் உள்ளன. அவற்றில் சில விமானங்கள், விமானந்தாங்கி போா்க்கப்பலில் இருந்து இயக்கப்படுகின்றன.

நிஷாந்த் சிங்குக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருந்த நிலையில், அவரது இழப்பு குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. அவரது உடல் கிடைக்கும் வரை அவர் உயிரோடு எங்கேனும் மீட்கப்படுவார் என்றே அனைவரும் நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →