முகப்பு
உலகம்

கராச்சியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 6 பேர் பலி

மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:59 PM
கராச்சி. - IANS
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 1:54 PM

மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் படைத் தாக்குதல் நடத்தியதில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிபடுத்தியுள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:54 PM

இந்த நிலையில் மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

அப்போது போராட்டக்காரர்கள் திடீரென அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதோடு உள்ளே சென்று தீ வைத்து வன்முறையிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:54 PM

30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் கராச்சி போலீஸார் தெரிவித்தனர்.

இதனால் கராச்சியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.

summary

At least six people were killed in clashes with police Sunday after hundreds of protesters stormed the U.S. Consulate in the Pakistani port city of Karachi, authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.