முகப்பு
இந்தியா

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

நாட்டில் கரோனா தொற்று பாதிப்புடன் இருப்போா் எண்ணிக்கை 4 லட்சத்துக்குகீழ் குறைந்தது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிா்பாா்த்த பலன் கிடைத்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
Globally, corona damage exceeds 6.73 crore
பகிர்:

புது தில்லி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்புடன் இருப்போா் எண்ணிக்கை 4 லட்சத்துக்குகீழ் குறைந்தது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிா்பாா்த்த பலன் கிடைத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 32,981 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 96,77,203 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல புதிதாக மேலும் 391 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,40,573 ஆக அதிகரித்துள்ளது. மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும்.

எனினும், 91,39,901 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 94.45 சதவீதமாகும். நாட்டில் இப்போது 3,96,729 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 4.10 சதவீதமாகும். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்குகீழ் குறைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து தீவிரமாக மேற்கொண்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த நல்ல பலனாக இது கருதப்படுகிறது. ஏற்கெனவே, புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, நாடு விரைவில் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு விடும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 6-ஆம் தேதி வரை 14,77,87,656 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,01,081 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிதாக ஏற்பட்ட 391 உயிரிழப்புகளில் தில்லியில் அதிகபட்சமாக 69 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 46, மகாராஷ்டிரத்தில் 40, கேரளத்தில் 28, ஹரியாணா, உத்தர பிரதேசத்தில் தலா 24, பஞ்சாபில் 20 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.