முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

மேற்கு வங்கத்தில் தாமரை மலரும்: ஜெ.பி. நட்டா

​மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இந்தியா

மேற்கு வங்கத்தில் தாமரை மலரும்: ஜெ.பி. நட்டா

​மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஜெ.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். அங்கு காணொலி வாயிலாக 8 கட்சி அலுவலகங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அறையைத் திறந்துவைத்தார். 

ஹாஸ்டிங்க்ஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசுகையில், "2021 தேர்தலில் தாமரை மலரும். மம்தா பானர்ஜியின் அரசை அகற்றுவோம். பாஜக, அலுவலகத்திலிருந்து கட்சியை நடத்தி வரும் நிலையில், மற்ற கட்சிகள் அவர்களது வீட்டிலிருந்து நடத்தப்படுகிறது" என்றார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், 2 நாள் பயணத்தில் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து நட்டா ஆய்வு செய்யவுள்ளார்.

முன்னதாக ஹாஸ்டிங்க்ஸ் வந்தபோது நட்டாவுக்கு சிலர் கருப்புக்கொடி காட்டினர். கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை வெளிப்படுத்தாமல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →