முகப்பு
இந்தியா

விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தொழில்துறை இணை அமைச்சர்

நாட்டின் நலன் கருதி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டின் நலன் கருதி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இன்று (புதன்கிழமை) 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறயிருந்த நிலையில், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், சில முக்கிய விவசாய சங்கத் தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மத்திய அமைச்சர்களுடன் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சோம் பிரகாஷ் கூறியதாவது, உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண் சட்டங்கள் குறித்தும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விவசாய சங்கங்களுக்கு எடுத்துரைத்தார். வேளாண் சட்டங்கள் குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் மத்திய அரசு வழங்கவுள்ளது.

இது குறித்து விவசாய சங்கங்கள் கூடி ஆலோசனை நடத்தட்டும். நாட்டின் நலன் கருதி விவசாயிகளின் எண்ணத்திற்கு அனைத்து தரப்பிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →