ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயம்
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகளின் கையெறி குண்டுகள் தவறுதலாக சாலையில் வெடித்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.