முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும்: ராகுல்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும் என்பதை குடியரசுத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மோசமடையும் என்பதை குடியரசுத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியுடன், சீதாராம் யெச்சூரி, சரத் பவார், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ''வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்ட மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம்.

உரியவர்களிடம் கலந்தாலோசிக்காமல், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அவை கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினோம்'' என்றார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் நிலைமை மேலும் மோசமடையும் என்று குடியரசுத் தலைவரிடம் குறிப்பிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.

பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது, ''வேளாண் சட்டங்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், யாருடைய ஆலோசனையையும் ஏற்காமல் மத்திய அரசு அவற்றை அவசர அவசரமாக சட்டமாக நிறைவேற்றியது.

தற்போது விவசாயிகள் அமைதியான முறையில் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்னைகளை அரசு தீர்க்க வேண்டும்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →